’வணக்கும் வாழ வைக்கும் சென்னை மிரட்டதுன்னை உனக்கு ஈடு இல்லையே’, ’சென்னை வட சென்னை’ என சென்னையை குறிக்கும் இப்பாடல்களைத்தான் சென்னைவாசிகள், தங்களது ஸ்டேட்டஸுகளாக சமூகவலைதளங்களில் இன்று பதிவிட்டுவருகின்றனர். சென்னையின் 380ஆவது தினம் இன்று கொண்டாடப்படுவதுதான் அதற்கு மிக முக்கியமான காரணம்.
இந்நிலையில், சென்னை தினமான இன்று சென்னை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிஎஸ்கே களமிறங்கியுள்ளது.
சின்ன தல ரெய்னாவின் பதிவு ஒரு கிரிக்கெட்டராக நல்ல பெயரை நான் பெற்றேன். ஆனால், நல்ல கிரிக்கெட்டராக இருப்பதைவிட நல்ல மனிதராக இருப்பதுதான் முக்கியம் என்பதை சென்னை மக்களும் அவர்களது கலாசாரமும்தான் எனக்கு கற்றுக்கொடுத்தது. சென்னையில் ECR சாலையில், காரை ஓட்டிச் செல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று ரெய்னா கூறியதை சிஎஸ்கே தனது அதிகார்ப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேலும், ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில், உங்களது கலாசராத்தின் மூலம், எனக்கு அளவு கடந்த அன்பை வழங்கிய மெட்ராஸூக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என பதிவிட்டிருந்தார்.
ஆம், ரெய்னா கூறியது போலவே, சென்னை (மெட்ராஸ்) பலருக்கு நல்ல மனிதராக இருக்க வேண்டும் என்பன உட்பட ஏராளமான பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. ரெய்னாவை போலவே, சக சிஎஸ்கே வீரர்களும் சென்னை குறித்த தங்களது அனுபவங்களையும் பதிவு செய்துவருகின்றனர்.