தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து போட்டி மழையால் ரத்து!

டர்பன்: தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

rain-washed-out-second-odi-between-south-africa-england
rain-washed-out-second-odi-between-south-africa-england

By

Published : Feb 8, 2020, 9:06 AM IST

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடருக்கு பின், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

இதன் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று 1-0 என முன்னிலையில் இருந்தது.

இதையடுத்து நேற்று நடக்கவிருந்த இரண்டாவது ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்தது.

இதனால் நீண்ட நேரக் காத்திருப்புக்கு பின் போடப்பட்ட டாஸில் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டி காக் - ஹென்ரிக்ஸ் இணை களமிறங்கியது. இதில் டி காக் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறம் தொடர்ந்து வந்த பவுமா 21 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அப்போது தென் ஆப்பிரிக்க அணி 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்திருந்தபோது, மீண்டும் மழை பெய்தது.

மழையால் ரத்து செய்யப்பட்ட தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து போட்டி

மழை நின்றுபின் மைதானத்தையும், பிட்ச்சையின் சோதனை செய்த நடுவர்கள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.

இந்தப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால் தென் ஆப்பிரிக்க அணி கடைசி போட்டியில் தோல்வியடைந்தாலும் தொடர் சமனில் முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி வாண்டரர்ஸ் மைதானத்தில் வரும் நாளை (பிப்.9) நடக்கிறது.

இதையும் படிங்க: வைடு போட்ட ஸ்ரீநாத், கேட்ச் விட்ட ரமேஷ், ரன் அவுட் ப்ளான் செய்த வாக்கர் யூனுஸ்... கும்ப்ளேவின் 10 விக்கெட்டுகள் கதை!

ABOUT THE AUTHOR

...view details