நியூசிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் சர்வதேச டி20 வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் இங்கிலாந்து அணியின் டேவிட் மாலன் 915 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 816 புள்ளிகளுடன் இந்திய அணியின் கே.எல். ராகுல் இரண்டாம் இடத்திலும், 801 புள்ளிகளுடன் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் மூன்றாம் இடத்திலும் நீடித்துவருகின்றனர்.
இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 697 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் நீடிக்கிறார். இதில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 788 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளார்.