தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

விக்கெட் கீப்பிங் செய்த ராகுல் - அடுத்த போட்டியில் பந்த் களமிறங்குவாரா? - இந்தியா - ஆஸ்திரேலியா

மும்பை: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும்போது தலையில் காயம் ஏற்பட்டதால், விக்கெட் கீப்பர் பொறுப்பை கேஎல் ராகுல் மேற்கொண்டார்.

Rahul keeps wicket as Pant had concussion while batting
Rahul keeps wicket as Pant had concussion while batting

By

Published : Jan 14, 2020, 10:01 PM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

அதில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் பேட்டிங்கின்போது, பேட்டில் பட்ட பந்து இன்சைட் எட்ஜ் ஆகி தலையில்பட்டது. அதுவே அவரது விக்கெட்டிற்கு காரணமாகவும் அமைந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கின்போது இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் களமிறங்கவில்லை. அந்தப் பொறுப்பை கேஎல் ராகுல் ஏற்றுக்கொண்டார்.

ரிஷப் பந்த்தை மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் ரிஷப் பந்த்துக்கு தலையில் அடிபட்டது பெரும் காயத்தை ஏற்படுத்தியுள்ளதா என ரசிகர்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'கோலி சிறந்த வீரர்தான்... ஆனால் ரோஹித்தின் பேட்டிங் வேற லெவல்' - பாக் வீரர்

ABOUT THE AUTHOR

...view details