இந்திய வீரர்கள் சச்சினை விடவும் ராகுல் டிராவிட் அதிகமாகக் கொண்டாடப்பட வேண்டியவர் என்ற வசனம் அடிக்கடி ரசிகர்களிடையே சமூகவலைதளங்களில் அடிக்கடி விவாதங்கள் வரும். இதற்கு வலுசேர்க்கும் விதமாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீஃப் பேசியுள்ளார்.
சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்: பாக். முன்னாள் கேப்டன் - பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீஃப்
டெக்னிக்கலாகவும், பிரஷர் சூழல்களில் கட்டுக்கோப்பாகவும் ஆடிய இந்திய வீரர்களில் ராகுல் டிராவிட் சிறந்தவர் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ''டெக்னிக்கலாவும், பிரஷர் சூழல்களைக் கணக்கில் கொண்டு பார்த்தால் அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களை விடவும் டிராவிட் ஒரு அடி முன் நிற்கிறார். சச்சின் டெண்டுல்கர் எப்போதும் பந்துவீச்சாளர்களை அட்டாக் செய்பவர். ஆனால் டிராவிட் நிலை அப்படி இல்லை. விக்கெட்டுகள் வேகமாக விழுந்தால், தடுத்து நிறுத்த வேண்டிய இடத்தில் இருப்பார்.
அனைத்து வீரர்களுடனான பார்ட்னர்ஷிப்பிலும் ராகுல் டிராவிட் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். அவர் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா என ரன்கள் சேர்க்காத நாடுகளே இல்லை. என்னைப் பொறுத்தவரை, சச்சினை விட டிராவிட் சிறந்த வீரர்'' என்றார்.