ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் லக்னோவில் நடைபெற்றுவருகிறது. இதில், ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்ற, டி20 தொடரை ஆப்கானிஸ்தான் அணி வென்றது.தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று லக்னோவில் தொடங்கியது.
75 ரன்களுக்கு ஏழு விக்கெட் ... பவுலிங்கில் வெயிட்டு காட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்! - ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, ரஹீம் கார்ன்வாலின் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 187 ரன்களுக்கு சுருண்டது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ஜாவித் அஹமதி 39, அமிர் ஹம்சா 34 ரன்கள் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரஹீம் கார்ன்வால் 75 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். டெஸ்ட் போட்டியில் அவர் கைப்பற்றும் முதல் ஐந்து விக்கெட்டுகள் (Five Wicket haul) இதுவாகும்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை விளையாடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 22 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களை எடுத்தபோது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜான் காம்பேல் 30 ரன்களிலும், ஷமார் ப்ரூக்ஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.