இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 12ஆவது சதத்தைப் பதிவுசெய்தார்.
இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், "அடிலெய்டில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீழ்வதற்கும், இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்துவதற்கும் ரஹானேவின் இந்தச் சதமானது உதவியாக இருக்கும்.
இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படும் ரஹானே, அப்பதவிக்கு எந்தக் குறைவும் இன்றி தனது பணியைச் செய்து முடித்துள்ளார். ஏனெனில் விராட் கோலி இல்லாமல் அணியை வழிநடத்துவது மட்டுமின்றி, அவர் சதமடித்தும் இந்திய அணிக்குப் பங்களிப்பைச் செய்துள்ளார்.