தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நடராஜனுடன் வீடியோ காலில் உரையாடிய ராதிகா, சரத்குமார்! - இந்திய கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜனிடம் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார், அவரது மனைவி ராதிகா இருவரும் இணைந்து உரையாடினர்.

Radhika Sarathkumar and cricketer natarajan video conference
Radhika Sarathkumar and cricketer natarajan video conference

By

Published : Feb 1, 2021, 6:07 PM IST

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன், தனது திறமையால் இந்திய அணியில் இடம் பிடித்து, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி வெற்றிகளைக் குவிக்க காரணமாக இருந்தார்.

இவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்துவரும் சூழலில், தேர்தல் சுற்றுப் பயணத்தில் இருக்கும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார், அவரது மனைவி ராதிகா இருவரும் இணைந்து காணொலி அழைப்பு மூலம் நடராஜனுடன் உரையாடி, தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அவர்களது உரையாடலின் போது சரத்குமார், “நான் நிறைய இடங்களில் உங்களைப் பற்றித்தான் பேசுகிறேன். ஏன் பேசுகிறேன் என்றால், நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் இன்னொருவர் வருவதற்கான வாய்ப்பை உருவாக்கி தந்தவர் நடராஜன் என்று சொன்னேன்.

பொதுவாக நான் அரசியல் ரீதியாக கூறுவேன், முதலமைச்சர் யார் வேண்டுமென்றாலும் ஆகலாம். அதற்கான எடுத்துக்காட்டாக உங்களை தான் கூறி வருகிறேன். ஏனெனில் திறமை இருந்தால் மட்டுமே வீரர் ஆக முடியும். நடராஜன் திறமை இருக்கவேத்தான் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தீர்கள். சேலத்தில் வாழப்பாடி பக்கத்தில் தான் இருந்தோம். அடுத்தமுறை வீட்டிற்கு வருகிறோம். நீங்களும் சென்னை வந்தால் வீட்டிற்கு வாருங்கள். வாழ்த்துகள்” என்று தங்களது வாழ்த்தைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:'பலவீனம் இல்லாதவர் கோலி' - மோயீன் அலி

ABOUT THE AUTHOR

...view details