தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 17, 2020, 11:50 PM IST

ETV Bharat / sports

டெஸ்ட் போட்டியில் விளையாட ரபாடாவுக்கு தடை!

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை ஆட்டமிழக்க செய்தபின், அவரை கிண்டல் செய்யும் விதமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் பங்கேற்க ரபாடாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Rabada sanctioned for Root dismissal celebration, set to miss Johannesburg Test
Rabada sanctioned for Root dismissal celebration, set to miss Johannesburg Test

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதன் முதல் இரு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா இரு டெஸ்ட் போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால், இந்தத் தொடர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று தொடங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அதையடுத்து முதல் மூன்று விக்கெட்டுகளுக்கு பிறகு, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் ரபாடா பந்தில் போல்டானார்.

இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த வீரரை விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில், ரபாடா அவரை கிண்டல் செய்யும் விதமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனை களநடுவர்கள், போட்டி நடுவரிடம் கொண்டு சென்றனர்.

ரபாடா

இதையடுத்து நடந்த விசாரணையில் ரபாடா செய்த தவறை ஒப்புக்கொண்டார். இந்நிலையில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ரபாடாவுக்கு போட்டியின் ஊதியத்திலிருந்து 15 விழுக்காடு அபராதமும், ஒரு மைனஸ் புள்ளியும் வழங்கப்பட்டது.

ரபாடா ஏற்கனவே ஸ்மித், வர்னர் ஆகியோரிடம் செய்த சைகைகளுக்காக மைனஸ் புள்ளிகளைப் பெற்றிருந்தார். இதனால் நான்கு புள்ளிகளைப் பெற்றுள்ளதால், இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ரபாடா விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: முதல் போட்டி தோல்விக்கு பதிலடி கொடுத்த இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details