பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 26ஆம் தேதி கராச்சியில் தொடங்கியது.
இதில் இன்று (ஜன.28) தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஃபவாத் ஆலம் 109 ரன்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா, கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.