இந்தியாவில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ள தொன்னர்ப்பிரிக்கா அணி, மூன்று டெஸ்ட், மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான தென்னாப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணிக்கு புதிய கேப்டன் நியமனம்..! - india
இந்தியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தொன்னாப்பிரிக்கா அணிக்கு குயிண்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில், இந்தியாவுக்கு எதிராக விளையாடும் தென்னாப்பிரிக்கா டி20 அணிக்கு இளம் வீரரான குயிண்டன் டி காக் கேப்டனாக செயல்படவுள்ளார். தொன்னாப்ரிக்கா டி20 அணியில் கேப்டனாக இருந்த, ஃபாப் டூ பிளிசிஸ்க்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் கேப்டனாக செயல்படுவார் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தனது முதல் சர்வதேச போட்டியின் கேப்டனாக அவர் செயல்படுவார்.
தென்னாப்பிரிக்க டி20 அணி விவரம்:
குயின்டன் டி காக் (கே), ரஸ்ஸி வான்டர் டௌசன், டெம்பா பவுமா, ஜூனியர் தலா, ஜார்ன் ஃபோர்டுயின், பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ரீசா ஹென்ட்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ஆண்டிலே பெஹ்லுக்வாயோ, டுவைன் பிரிட்டோரியஸ், ககிசோ ரபாடா, தப்ரைஸ் ஷம்ஷி, ஜான் ஸ்மட்ஸ்.