தென் ஆப்பிரிக்க ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டன் குயிண்டன் டி காக். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் போது தென் ஆப்பிரிக்க அணி படுதோல்வியை சந்தித்ததை அடுத்து, அப்போது கேப்டனாக இருந்த பாப் டூ பிளேசிஸ் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் தென் ஆப்பிரிக்க அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக தொடக்க வீரர் குயிண்டன் டி காக் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது டெஸ்ட் கேப்டனாகவும் டி காக்கை நியமிப்பதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இம்மாதம் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையடாவுள்ளது.