ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது நான்கு போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டி பகலிரவு ஆட்டமாக நடத்தப்படவுள்ளது.
இதனால் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது பயிற்சி போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பந்த் 73 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இதன் மூலம் பிங்க் பந்து கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
இதுகுறித்து பேசிய ரிஷப், "நான் களமிறங்கும்போது நிறைய ஓவர்கள் இருந்தன. அதனால் நானும் விஹாரியும் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தோம். இதனால் நாங்கள் இருவரும் முதலில் நிதானமாக விளையாடி, நல்ல ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தோம். அதன்பின் நான் வழக்கம்போல எனது இயல்பான ஆட்டத்திற்கு திரும்பி, ஸ்கோரை உயர்த்தினேன்.
அதனால் அப்போட்டியில் நான் சதமடித்தேன். இச்சதம் எனது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. ஏனெனில் நான் தற்போது ஆஸ்திரேலியாவில் உள்ளேன். காயம் காரண்மாக என்னால் முதல் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. அதிலிருந்து மிண்டு பயிற்சி போட்டியில் சதமடித்திருப்பது எனக்கு பெரும் நம்பிக்கையை வழங்கியுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:லாலிகா: மெஸ்ஸியின் கோலால் பார்சிலோனா அசத்தல் வெற்றி!