இந்தியாவில் கடந்த ஒரு வாரங்களில் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 400க்கும் மேற்பட்டோருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இந்தியாவில் இரண்டாம் கட்ட நிலையில் உள்ள இந்த கோவிட்-19 வைரஸ் தொற்று மூன்றாம் கட்டத்தை எட்டிவிடக்கூடாது என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றன.
அதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைரஸ் எளிதாகப் பரவக்கூடும் என்பதால், பொது நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பிரதமர் மோடி அறிவித்தபடி நாட்டு மக்கள் அனைவரும் நேற்று காலை ஏழு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை சுயஊடரங்கை கடைப்பிடித்தனர்.
அதே சமயம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் பணிபுரிந்துவரும் மருத்துவப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாலை ஐந்து மணிக்கு கைகளை தட்டியோ அல்லது மணி அடித்தோ ஆதரவை காட்டுங்கள் எனவும் மோடி கேட்டுக்கொண்டிருந்தார். ஆனால், ஐந்து மணிக்குப் பிறகு பெரும்பாலான மக்கள் தங்களது வீட்டை விட்டு வெளியே வந்தது மட்டுமின்றி. ஒரே இடங்களில் கூடி இந்தியா ஏதோ சாதித்ததைப் போல கை தட்டிக் கொண்டாடினார்.