தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

சிட்னி டெஸ்ட்: சாதனைப் படைத்த புஜாரா! - இந்திய வீரர்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்த 11ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் செட்டேஸ்வர் புஜாரா படைத்துள்ளார்.

Pujara becomes 11th Indian batsman to reach 6000 runs in Test cricket
Pujara becomes 11th Indian batsman to reach 6000 runs in Test cricket

By

Published : Jan 11, 2021, 9:10 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி இலக்கை நோக்கி விளையாடிவருகிறது.

இதில் இந்திய அணி தரப்பில் புஜாரா மற்றும் ரிஷப் பந்த் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்திவருகின்றனர்.

இப்போட்டியில் செட்டேஸ்வர் புஜாரா 47 ரன்கள் எடுத்ததன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 6000 ரன்களைக் கடந்தார். இதன்மூலம் இந்தியா சார்பில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆறாயிரம் ரன்களைக் கடந்த 11ஆவது வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் புஜாரா, அரைசதம் கடந்தும் அசத்தினார். இது புஜாராவின் 26ஆவது டெஸ்ட் அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சிட்னி டெஸ்ட்: அதிரடியில் மிரட்டும் பந்த்; வெற்றி இலக்கை நோக்கி இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details