ஐபிஎல் போட்டிகளைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளும் தங்களது நாட்டில் உள்ளூர் டி20 தொடர்களை நடத்திவருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தான் நாடும் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் 2015ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவருகிறது.
அந்த வகையில் இந்தாண்டுக்கான பி.எஸ்.எல். போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற கராச்சி கிங்ஸ் - பெஷ்வர் ஸல்மி அணிகளுக்கு இடையிலான போட்டியின் நடுவே, கராச்சி அணியின் உரிமையாளர் தாரிக் வாசி தனது மொபைல் போனில் உரையாடினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இக்குற்றச்சாட்டு குறித்து ஐசிசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கண்டனங்களும் எழுந்தன.
இதனையடுத்து ஐசிசி அலுவலர் ஒருவர் கூறுகையில், பி.எஸ்.எல். ஆனது பாகிஸ்தானில் நடக்கும் உள்ளூர் போட்டியாகும் என்றார். அதனால் இந்த விவகாரத்தை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பார்த்துக்கொள்ளும் எனவும், இதில் ஐசிசி தலையிடுவதற்கு எந்தத் தேவைகளும் இல்லையெனவும் பல்டியடித்துள்ளது.