கரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்குப் பின் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், வருகிற செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடருக்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இங்கிலாந்து செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ”இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலியா அணி செப்டம்பர் 4, 6, 8 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளிலும், செப்டம்பர் 10, 12, 15 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.