இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகிய இருவருக்கும் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள்(ஃபாலோயர்ஸ்) அதிகமானோர் உள்ளனர். இவர்களின் பதிவுகளுக்கு லைக்ஸ், ஷேர்கள் லட்சத்தைத் தாண்டும்.
உலகம் முழுவதும் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்களில் இவர்கள் இருவருக்கும் பின்தொடர்பவர்கள் அதிகம் இருப்பது அனைவரும் அறிந்ததே.
ஹோப்பர் (Hopperh) நிறுவனம் வெளியிட்டுள்ள2019ஆம் ஆண்டிற்கான இன்ஸ்டாகிராம் பிரபலங்களின் பட்டியலில் இவர்கள் இருவரும் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களின் ஒரு ஸ்பான்சர்ட் போஸ்ட்டின் மதிப்பு கோடிக் கணக்கில் உள்ளது. 38.2 மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் கோலி, ஒரு ஸ்பான்சர்ட் போஸ்ட்டுக்கு ரூ.1.35 கோடி பெறுகிறார். அதேபோல் 43.4 மில்லியன் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் பிரியங்கா சோப்ரா, ஒரு ஸ்பான்சர்ட் போஸ்ட்டுக்கு ரூ.1.86 கோடி வாங்குகிறார்.