ஊக்க மருந்து சர்ச்சையில் ப்ரித்விக்கு 8 மாதம் தடை-பிசிசிஐ - dope test
இந்திய அணியின் இளம் வீரர் ப்ரித்வி ஷா, ஊக்கமருந்து உபயோகித்ததால் அவரை 8 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
ப்ரித்வி ஷா
ஊக்க மருந்து பயன்படுத்திய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்து பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. தடை செய்யப்பட்ட மருந்தை தவறாக உட்கொண்டதால் ப்ரித்வி ஷாவிற்கு 8 மாத காலம் பிசிசிஐ தடை விதித்துள்ளது. இவர் இந்தியாவின் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தார் என்பதும், ஐ.பி.எல்-லில் டெல்லி அணிக்குத் தொடக்க ஆட்டக்காரராக ஆடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.