இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தோனிக்கு பிறகு ரிஷப் பந்த் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், ஒரே ஒரு போட்டியில் ஏற்பட்ட காயத்தால் ரிஷப் பந்தின் விக்கெட் கீப்பர் இடத்தை ராகுல் தட்டிச்சென்றுவிட்டார். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிரான தொடரிலும் விக்கெட் கீப்பராகவும் ஐந்தாம் நிலை பேட்ஸ்மேனாகவும் களமிறங்கி ராகுல் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்.
இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவது பற்றி பேசிய ராகுல், '' இந்திய அணியின் விக்கெட் கீப்பர் இடத்தை நிரப்ப வேண்டும் என நினைக்கையில் எனக்குள் பதற்றம் அதிகமாகியது. ஏனென்றால் நாம் ஒரு தவறு செய்தாலும், ரசிகர்கள் நம்மை பெரும் அழுத்தத்திற்குள் தள்ளிவிடுவார்கள். தோனியின் இடத்தை நிரப்புவது சாதாரண விஷயமல்ல என மக்கள் எண்ணுகிறார்கள். இந்திய அணியில் தோனியின் இடத்தை நிரப்புவதுதான் மிகவும் சவாலான விஷயம்.