1980களில் கிரிக்கெட்டில் தலைசிறந்த ஆல்ரவுண்டராக வலம்வந்தவர், இங்கிலாந்தின் இயன் போத்தம். இங்கிலாந்து அணிக்காக 1977 முதல் 1992 வரை 102 டெஸ்ட், 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 5200 ரன்களும், 2113 ரன்களும் எடுத்துள்ளார்.
இதுதவிர 102 டெஸ்ட் போட்டிகளில் 383 விக்கெட்டுகளும், 116 ஒருநாள் போட்டிகளில் 145 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து அணிக்காக சிறப்பான பங்களிப்பு தந்த இவரை கெளரவிக்கும் விதமாக இவருக்கு 2007இல் நைட்ஹூட் பட்டம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிரிட்டீஷ் நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினர்களாக 36 பேர் தேர்வுசெய்யப்பட்டனர். அதில், 64 வயதான இயன் போத்தம் ஒருவர் ஆவார்.