கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணிக்கு 11 பிளேயர்கள் மற்றும் ஒரு மாற்று வீரர் என்பது நடைமுறையாக இருந்து வருகிறது. போட்டியின் போது ஏதேனும் ஒரு வீரருக்குக் காயம் ஏற்பட்டாலோ அல்லது தவிர்க்க முடியாத காரணங்களால் விளையாட முடியாமல் போனாலோ அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஃபீல்டிங் செய்வார். ஆனால் அவர் பேட்டிங்கோ, பவுலிங்கோ செய்ய முடியாது.
இந்த முறைக்கு பவர் பிளேயர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த பவர் பிளேயர் முறையில் எந்த அணியும் தங்களுக்குத் தேவையான ஒரு மாற்று வீரரை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இறக்க முடியும்.
அவர் பேட்டிங் அல்லது பந்துவீச்சு என இரண்டையும் செய்ய முடியும். இது சம்மந்தமான ஐபிஎல் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. ஆனால் இந்த புதிய பவர் பிளேயர் விதியானது இந்த ஐபிஎல் தொடரில் புதிய சிக்கல்களை உருவாக்கும் என்பதினால் தற்போது அதனை அமல் படுத்தும் முடிவு காலதாமதமாக்கப்பட்டுள்ளது.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பெயர் போன ஐபில் போட்டிகளில் இந்த விதிக்கு பதிலாக இந்தக் கூட்டத்தில் புதிதாக நோ-பால் அம்பையர் எனும் ஒருவரை நியமிக்கவுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இவர் வேலை பந்துவீச்சாளர்களின் நோ-பால்களை மட்டும் கவனிப்பது எனவும், மூன்றாம் அல்லது நான்காம் நடுவரோ கிடையாது எனவும் தெரிவித்துள்ளது.