இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்ததையடுத்து, பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட், மூன்று டி20 ஆகிய தொடர்கள் நடக்கவுள்ளது. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடக்கவுள்ள இந்தத் தொடருக்காக பாகிஸ்தான் அணி சார்பாக 29 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி ஞாயிறுக்கிழமை (நாளை) இங்கிலாந்து புறப்படவுள்ளது. இதனையொட்டி தேர்வு செய்யப்பட்ட அனைத்து வீரர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 10 வீரர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் அதிர்ந்த பாகிஸ்தான் நிர்வாகம், அவர்களுக்கான மாற்று வீரர்களைத் தேர்வு செய்தது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து வீரர்களும் தங்களை உடனடியாக தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்ட நிலையில், பாகிஸ்தான் அணியின் ஹஃபீஸ் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள தவிர்த்தார். பின்னர், தனியார் லேப்பில் செய்யப்பட்ட பரிசோதனையில் ஹஃபீஸிற்கு கரோனா நெகட்டிவ் என தெரியவந்தது.