தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

துணை கேப்டன்களாக பூரன், சேஸ் நியமனம்! - வெஸ்ட் இண்டீஸ் துணை கேப்டன்

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு நிக்கோலஸ் பூரனையும் டெஸ்ட் தொடருக்கு ராஸ்டன் சேஸையும் துணை கேப்டன்களாக கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் நியமித்துள்ளது.

Pooran, Chase
Pooran, Chase

By

Published : Nov 12, 2020, 6:20 PM IST

நியூஸிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20 போட்டிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. இதற்கான அணி வீரர்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்தது. அதன்படி டி20 அணியை பொல்லார்டும் டெஸ்ட் அணியை ஜேசன் ஹோல்டரும் வழிநடத்துவார்கள் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று இரு தொடர்களுக்கான துணை கேப்டன்களை கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அறிவித்துள்ளது. டி20 அணியின் துணை கேப்டனாக நிக்கோலஸ் பூரனும் டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ராஸ்டன் சேஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாகத் தலைமைத் தேர்வாளர் கூறுகையில், “ராஸ்டன் சேஸ் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். போட்டியில் வியூகம் வகுப்பதில் அவர் திறமை வாய்ந்தவர். களத்தில் கேப்டனான ஹோல்டருக்கு உதவியாகச் செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறோம்.

நிக்கோலஸ் பூரனும் திறமைவாய்ந்த வீரர் தான். அவர் ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் துணை கேப்டனாகச் செயல்பட்டுள்ளார். அந்த அனுபவம் அணிக்கு நிச்சயம் கை கொடுக்கும்” என்றார்.

மூன்று டி20 போட்டிகள் முறையே நவ. 27,29,30 ஆகிய தேதிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முறையே டிச.3, 11 ஆகிய தேதிகளிலும் நடைபெறவிருக்கின்றன.

இதையும் படிங்க:கோலி இல்லாததால் நிச்சயம் கோப்பை ஆஸி.க்குத்தான் - வாஹன்

ABOUT THE AUTHOR

...view details