ஆஸ்திரேலிய அணிக்கு இரண்டு உலகக்கோப்பை பெற்றுத்தந்தவரும் உலக கிரிக்கெட்டின் ஜாம்பவானுமாக வலம்வந்தவர் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக கிட்டத்தட்ட 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார்.
2012ஆம் ஆண்டு அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு முடிவை அறிவித்த இவர், மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணிக்காக பயிற்சியாளராகச் செயல்பட்டார். தற்போது, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்துவருகிறார்.
இந்நிலையில் கிரிக்கெட் துறையில் கல்லி கிரிக்கெட் (தெருவில் ஆடும் மட்டைப்பந்தாட்டம்) விளையாடுபவர்கள்கூட சமூக வலைதளத்தில் தனக்கென ஒரு கணக்கை உருவாக்கிவரும் நிலையில், சமூக வலைதளங்கள் தோன்றிய காலத்திலிருந்து அதனைப் பொருட்படுத்தாமல் இன்றுவரை சமூக வலைதள கணக்கைத் தொடங்காமல் இருந்த நட்சத்திரம் என்றால் அது ரிக்கி பாண்டிங்தான்.