தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மோடிக்கு விராட் கோலி ஆதரவு

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக அடுத்த 21 நாள்களுக்கு நாடு முடக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

'Please stay at home': Virat Kohli ask people to follow social distancing
'Please stay at home': Virat Kohli ask people to follow social distancing

By

Published : Mar 25, 2020, 9:41 AM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் (கோவிட் -19) தொற்று வேகமாக பரவிவருகிறது. இதுவரை இந்தியாவில் இந்த கோவிட் -19 வைரஸால் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இம்மாத இறுதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில், நாட்டையே அச்சுறுத்தி வரும் கோவிட் - 19 வைரஸ் குறித்து பிரதமர் மோடி நேற்றிரவு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அதில், கோவிட் -19 வைரஸைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்று (நேற்று) முதல் அடுத்த 21 நாள்களுக்கு நாடு முற்றிலும் முடக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, மோடியின் இந்த அறிவிப்புக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில் அவர், நமது பிரதமர் கூறியபடி அடுத்த 21 நாட்கள் நமது நாடு முடங்கவுள்ளதால், பொதுமக்கள் அனைவரும் தங்களது வீட்டில் பாதுகாப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த கோவிட் - 19 வைரஸ் பரவமால் இருக்க சமூகத்தைவிட்டு விலகி தனிமைப்படுத்தியிருப்பதே நமக்கு இருக்கும் ஒரே தீர்வாகும் என குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க:மறு ஒளிப்பரப்பாகும் 2011 உலகக்கோப்பை தொடர்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details