தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'நீங்க இப்படி நடக்கக்கூடாது' - கங்குலியை கலாய்த்த யுவராஜ் சிங் - யுவராஜ் சிங்

லார்ட்ஸ் மைதானத்தில் ஆடிய அறிமுகப் போட்டியில் சதம் விளாசியதை நினைவுகூர்ந்த கங்குலியின் பதிவிற்கு யுவராஜ் சிங் பதிவிட்ட பின்னூட்டம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

please-be-professional-yuvraj-trolls-ganguly
please-be-professional-yuvraj-trolls-ganguly

By

Published : Feb 14, 2020, 9:32 AM IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான கங்குலி 1996ஆம் ஆண்டு மெக்கா ஆஃப் கிரிக்கெட் என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அறிமுகப் போட்டியிலேயே சிறப்பாக ஆடி சதம் விளாசி லார்ட்ஸ் ஹானர்ஸ் போர்டில் (honours Board) இடம்பிடித்தார்.

இதனை நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கங்குலி நினைக்கூர்ந்து, அவரும் டிராவிட்டும் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டார். அந்தப் புகைப்படத்தில் கங்குலி ஆக்ரோஷமாக கையை உயர்த்தி நிற்பதைக் கண்ட முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங், ''நீங்கள் பிசிசிஐயின் தலைவர். அதற்கு ஏற்றார்போல் செயல்படுங்கள்'' என கலாய்த்து பதிவிட்டார்.

இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்திய வீரர்களில் பெரும்பாலானோர் டிவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து இயங்கிவரும் நேரத்தில் கங்குலி இன்ஸ்டாகிராம் தளத்தில் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பராசக்தி எக்ஸ்பிரஸின் சாதனையை முறியடித்த ஸ்டெயின்

ABOUT THE AUTHOR

...view details