இங்கிலாந்து அணியின் இளம் வீரர் சாம் பில்லிங்ஸ், உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக காயம் ஏற்பட்டதால், அணியில் சாம் இடம்பெறவில்லை. இதையடுத்து காயத்திலிருந்து மீண்ட பின், அவர் ஆடிய முதல்தர போட்டிகளிலும் சரியாக ரன்கள் குவிக்கவில்லை.
'டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதே எனது லட்சியம்' - சாம் பில்லிங்ஸ் - சிஎஸ்கே
இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் ஆடுவதே தனது லட்சியம் என இளம் வீரர் சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்.
இச்சூழலில், தனியார் கிரிக்கெட் தளத்திற்குப் பேட்டியளித்துள்ள சாம் பில்லியங்ஸ், ''கடந்த வருடம் எனக்குக் கடினமாகவே அமைந்தது. உலகக்கோப்பை அணியில் இடம்பெற முடியாமல் போனது மிகப்பெரிய ஏமாற்றம். தற்போது நடுவரிசை வீரராக அணிக்குள் நுழைய முயற்சிசெய்து வருகிறேன்.
ஜோ டென்லி, மொயின் அலி ஆகியோரும் நடுவரிசையில் ஆடுவதற்குத் தயாராக உள்ளார்கள். இங்கிலாந்து அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 55 பேர் பயிற்சி முகாமில் கடுமையாகப் பயிற்சி செய்து வருகிறார்கள். இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்க வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்காக என்னைத் தயார்படுத்தி வருகிறேன்'' என்றார்.