தமிழ்நாடு

tamil nadu

ஐபிஎல் தொடரைப் பார்வையாளர்களின்றி நடத்துவதே சிறந்த வழி - ஹர்திக் பாண்டியா!

By

Published : Apr 26, 2020, 10:40 AM IST

கரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை, பார்வையாளர்களின்றி நடத்துவதே சிறந்த வழி என இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

Combating Covid-19: KL Rahul's 2019 World Cup bat sold for over Rs 2.6 lakh in auction
Playing IPL behind closed doors a smarter option: Pandya

உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 29 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றிலிருந்து தங்களது நாட்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகப் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

இப்பெருந்தொற்றால் இம்மாதம் இந்தியாவில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் தொடர் தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களது குடும்பத்தினருடம் நேரத்தை செலவிட்டுவருகின்றனர். அதிலும் சிலர் சமூக வலைதள நேரலை மூலம் நேர்காணல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தும் வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா இருவரும் இன்ஸ்டாகிராம் நேரலை நேர்காணல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது தினேஷ் கார்த்திக், பார்வையாளர்களின்றி நடைபெறும் ஐபிஎல் தொடர் எப்படி இருக்கும் என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாண்டியா,

ஹர்திக் பாண்டிய - தினேஷ் கார்த்திக்

"பார்வையாளர்களின்றி நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் மிகவும் வித்தியாசமானது. மேலும் நாம் எப்போது ரசிகர்களுடன் நடைபெறும் போட்டிகளை விளையாடுவதையேதான் விரும்புவோம்.

ஆனால் ரஞ்சி கோப்பை போன்ற தொடர்களுக்கு ரசிகர்கள் யாரும் வருவதில்லை. அதுபோல இந்த வருடம் ஐபிஎல் தொடரை ரசிகர்களின்றி நடத்துவது ஒரு சிறந்த வழியாகத் தெரிகிறது. அதேபோல் பொதுமக்களும் வீட்டிலேயே இருந்து ஐபிஎல் போட்டிகளைக் கண்டு பொழுதைபோக்குவர்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, தற்போதைக்கு இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவதாகத் திட்டமில்லை என்று தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்!

ABOUT THE AUTHOR

...view details