தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தை ஆதரித்த தென்ஆப்பிரிக்க வீரர்கள்! - தென்ஆப்பிரிக்க

செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பூங்காவில் நடைபெற்ற ஒற்றுமை கோப்பை தொடருக்கு முன்பாக, வீரர்கள் பிளாக் லைவ்ஸ் மேட்டர்(Black Lives Matter) இயக்கத்தை ஆதரிக்கும் விதமாக முழங்காலிட்டு, தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

players-take-a-knee-before-start-of-3tc-match-in-south-africa
players-take-a-knee-before-start-of-3tc-match-in-south-africa

By

Published : Jul 19, 2020, 2:03 AM IST

நிறவெறி எதிர்ப்பின் புரட்சிகரத் தலைவரும், தென்ஆப்பிரிக்காவின் முதல் அதிபருமான நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, அந்நாட்டில் நெல்சன் மண்டேலா தினத்தன்று ஒற்றுமை கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்தாண்டிற்கான தொடர் நேற்று(ஜூலை 18) செஞ்சுரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பூங்காவில் தொடங்கியது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாக அணி வீரர்கள் அனைவரும் பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்தை ஆதரிக்கும் வகையில், மைதானத்தில் மண்டியிட்டு, தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

வழக்கமாக, இரண்டு அணிகள் மட்டும் மோதும் இக்கிரிக்கெட் தொடரில், தற்போது மூன்று அணிகள் ஒரே போட்டியில் விளையாடும் வகையில், அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி எட்டு வீரர்கள் கொண்ட, மூன்று அணிகள் ஒரே போட்டியில் விளையாடி(3டிசி) வருகிறது.

அதேசமயம் கரோனா வைரஸுக்குப் பின் தென்ஆப்பிரிக்க வீரர்கள் பங்கேற்கும் முதல் போட்டியும் இதுவாகும். இதற்கு முன்னதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் இங்கிலாந்து அணியுடனான தொடரில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details