பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின், முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. 2009இல் இவ்விரு அணிகளுக்கு இடையே லாகூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு தற்போது தான் பாகிஸ்தானில் மீண்டும் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்துவரும் இலங்கை அணி 68.1 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை எடுத்த போது முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனிடையே, 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தங்களது நாட்டில் டெஸ்ட் போட்டி நடைபெறுவது குறித்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.