சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு குறைந்தபட்சம் 15 வயதை எட்டியிருக்க வேண்டும் என்கிற புதிய விதிமுறையை ஐசிசி அறிவித்துள்ளது.
இனி இந்த வயசு ஆனாதான் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் - ஐசிசி திட்டவட்டம்! - சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் குறைந்தபட்சம் வயது வரம்பை ஐசிசி நிர்ணயித்துள்ளது
இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆடவர்/மகளிர் ஐசிசி போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், யு-19 போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.இளம் வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், சில அசாதாரணமான சூழலில் 15 வயதுக்குட்பட்ட வீரரை நிச்சயமாக அணியில் சேர்க்க வேண்டிய இருந்தால், முறையாக ஐசிசியிடம் விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.அந்த வீரரின் அனுபவம், மனநிலை, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதி போன்றவற்றை தெரிவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கிடைத்த தகவலின்படி, பாகிஸ்தானின் ஹசன் ராஸா, சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் அறிமுகமாகும்போது அவருக்கு 14 வயது மற்றும் 227 நாள்கள் மட்டுமே பூர்த்தியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.