இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. பகலிரவு ஆட்டமாக நடைபெறும் இப்போட்டிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேச அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்திய வேகப்பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 106 ரன்களுக்குள் சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷத்மன் இஸ்லாம் 29 ரன்களும், லிட்டன் தாஸ் 24 ரன்களும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் இஷாந்த் ஐந்து, உமேஷ் மூன்று, ஷமி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.