கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இம்மாதம் 15ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஐபிஎல் தொடர், தற்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராக வலம் வந்த கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பதிவில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை கேலி செய்யும் விதத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஹேய் தோனி, எனக்காக நீங்கள் ஏன் அங்கு ஒரு வீரரை வைக்கைக்கூடாது? ஏனெனில் உங்களுடன் ரன் அடிப்பது எனக்கு மிகவும் எளிதானது என்று பதிவிட்டு, அத்துடன் போட்டியின் போது தோனியுடன் உரையாடுவது போன்ற புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.
இதைக் கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவருக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஆனால் சில நேரங்களில் உங்களுக்கு ஃபீல்டர்களின் தேவை இருக்காது போலவே... என்று பதிவு செய்து பீட்டர்சன்னின் விக்கெட்டை தோனி விக்கெட் கீப்பிங் முறையில் எடுப்பது போன்ற புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் சிறந்த கிரிக்கெட் வீரராக வலம் வந்த கெவின் பீட்டர்சன், இந்திய மண்ணில் இந்திய அணிக்கெதிராக ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது அதிக ரன்களை விளாசியர் என்ற பெருமையை பெற்றவர். மேலும் அவர் தற்போது ஐபிஎல் தொடரின் வர்ணனையாளராகவும் செயல்பட்டுவருகிறார்.
இதையும் படிங்க:அரசிற்கு ஆதரவாக களமிறங்கிய பிசிசிஐ! #TeamMaskForce