இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் கெவின் பீட்டர்சன். இங்கிலாந்து அணி 2005ஆம் ஆண்டில் ஆஷஸ் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றவும், 2010இல் டி20 உலகக்கோப்பைத் தொடரை வெல்லவும் முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில், இவர் தனக்கு தானே ஹேர் கட் செய்துகொண்டது மட்டுமல்லாமல் தனது மகனுக்கும் ஹேர்கட் செய்துள்ளார். தனது மகனுக்கு ஹேர்கட் செய்யும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதவிட்ட அவர், அந்த ஹேர்கட்டிற்கு டென்னிஸ் பால் கட் எனவும் பெயர் வைத்துள்ளார்.