தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி நான்கு டெஸ்ட் கொண்ட தொடரில் தற்போது விளையாடிவருகிறது. இதில், செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நாளை நடைபெறவுள்ளது.
இந்நிலையில், "இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற வேண்டும் என்றால் ஆண்டர்சன் அல்லது ஸ்டூவர்ட் பிராட் இவர்களில் ஒருவரை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக பேட்ஸ்மேன் ஒருவரை அணியில் தேர்வுசெய்யுங்கள்" என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஸ்டூவர்ட் பிராட் அல்லது ஆண்டர்சன் இருவரில் ஒருவர் மட்டுமே விளையாடுவார் என இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தெரிவித்திருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.