தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மீண்டும் வருகிறார் முன்னாள் பயிற்சியாளர்- உற்சாகத்தில் ரசிகர்கள்!

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பயிற்சியாளரான பில் சிம்மன்ஸ் 3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

head coach of the West Indies

By

Published : Oct 15, 2019, 11:23 AM IST

2016ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைத் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்ற பிறகு, அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் சர்ச்சைக்குரிய முறையில் நீக்கப்பட்டார்.

இவரது நீக்கம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகம் எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது நான்காண்டு ஒப்பந்த அடிப்படையில் பில் சிம்மன்ஸ், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பார்படாஸ் அணிக்குப் பயிற்சியாளராக சிம்மன்ஸ் நியமிக்கப்பட்டார். இவரின் பயிற்சியாளர் பதவியின் போது தான் பார்படாஸ் அணி கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சர்ச்சையில் சிக்கும் கபில்தேவ் - தொடரும் கிரிக்கெட் சர்ச்சை!

ABOUT THE AUTHOR

...view details