தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டில், தனது வித்தியாசமான பந்துவீச்சு முறையினாலும் துல்லியமான யார்க்கர் பந்துகளினாலும் சிறந்த பந்து வீச்சாளராக வலம்வருபவர் இந்திய வீரர் பும்ரா. டி20, ஒருநாள், டெஸ்ட் என அனைத்துவிதமான போட்டிகளிலும் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சாளராகத் திகழ்கிறார்.
கரோனா வைரசால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பும்ரா சக வீரர் யுவராஜ் சிங்குடன் நேற்று இன்ஸ்டாகிராம் நேரலையில் தனது கிரிக்கெட் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது யுவராஜ் சிங், பும்ராவின் முறை குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பும்ரா, "ஆரம்ப காலக்கட்டத்தில் ரசிகர்கள் எனது வித்தியாசமான பந்துவீச்சைக் கண்டு நான் நீண்ட நாள்கள் இந்திய அணிக்குள் தாக்குப்பிடிக்க மாட்டேன் என நினைத்தனர். குறிப்பாக நான் ரஞ்சி டிராபி தொடரில் மட்டுமே விளையாடுவேன் என அவர்கள் விமர்சித்துவந்தனர். ஆனால் அவர்களுக்கு நான் எனது ஆட்டத்திறன் மூலமே பதிலளித்தேன்" என விளக்கினார்.