இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வந்த இர்பான் பதான் நேற்று அனைத்துவிதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2003இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகமான இர்பான் பதான், இறுதியாக 2012இல் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில்தான் விளையாடினார்.
இந்திய அணிக்காக 29 டெஸ்ட், 120 ஒருநாள், 24 டி20 என 173 போட்டிகளில் விளையாடி 301 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். தனது சிறப்பான ஆட்டத்திறன் மூலம் இந்திய அணிக்காக பல வெற்றிகளை தேடித் தந்துள்ளார். இந்நிலையில், ஓய்வுபெற்ற பின், தனக்கு ஒரேயோரு வருத்தம் மட்டுமே உள்ளது என மனம் திறந்து பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"கிரிக்கெட்டில் பொதுவாக வீரர்கள் 27 அல்லது 28 வயதில்தான் தங்களது பயணத்தை தொடங்கி 35 வயதுவரை விளையாடுவார்கள். ஆனால், எனது வாழ்க்கை (கிரிக்கெட்) 27 வயதிலேயே முடிந்துவிட்டது. நான் 27 வயதை எட்டியபோது அனைத்துவிதமான போட்டிகளிலும் சேர்த்து 301 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளேன்.