தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

நவ. 22 முதல் வுமன்ஸ் டி20 சாம்பியன்ஷிப் - பிசிபி அறிவிப்பு! - பிசிபி பிளாஸ்டர்ஸ்

பாகிஸ்தானின் உள்ளூர் மகளிர் டி20 தொடரான பிசிபி வுமன்ஸ் டி20 சாம்பியன்ஷிப் தொடர் வருகிற நவம்பர் 22ஆம் தேதி முதல் தொடங்கும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

PCB's Womens T20 championship to begin on November 22
PCB's Womens T20 championship to begin on November 22

By

Published : Nov 21, 2020, 9:19 PM IST

பாகிஸ்தானின் மகளீர் உள்ளூர் டி20 தொடரான பிசிபி வுமன்ஸ் டி20 சாம்பியன்ஷிப் தொடர் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டிற்கான போட்டி அட்டவணை மற்றும் மைதானங்கள் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதையடுத்து தற்போது பிசிபி வுமன்ஸ் டி20 சாம்பியன்ஷிப் தொடருக்கான அட்டவணை, மைதானம், பரிசுத்தொகை ஆகியவற்றை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

அதன்படி பிசிபி பிளாஸ்டர்ஸ், பிசிபி சேலஞ்சர்ஸ், பிசிபி டைனமைட்ஸ் என மூன்று அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது நவம்வர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை நடைபெறும் எனப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. மேலும் போட்டிகள் அனைத்தும் ராவல்பிண்டியில் உள்ள பிண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானங்களில் மட்டும் தான் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு பரிசுத்தொகையாக 10 லட்சம் பாகிஸ்தான் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 5 லட்சம் பாகிஸ்தான் ரூபாயும் வழங்கப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க:‘கோலிக்கு எதிராக கூடுதல் கவனம் தேவை’ - மார்கஸ் ஸ்டோய்னிஸ்!

ABOUT THE AUTHOR

...view details