தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'ஆசிய கோப்பை ரத்து பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை' - பிசிபி - பிசிபி

2020ஆம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை தொடர் ரத்துசெய்யப்பட்டதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடமிருந்து எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் தங்களுக்கு வரவில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

pcb-unaware-even-as-bcci-chief-ganguly-says-2020-asia-cup-is-cancelled
pcb-unaware-even-as-bcci-chief-ganguly-says-2020-asia-cup-is-cancelled

By

Published : Jul 9, 2020, 4:25 PM IST

சமீபத்தில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி பங்கேற்ற இன்ஸ்டாகிராம் உரையாடலில் ஆகிய கோப்பை தொடர் ரத்துசெய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருந்தார். இது ஆசியா நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால், ஆசிய கோப்பை தொடர் ரத்தானது பற்றி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பாக எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் பேசுகையில், ''ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடமிருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு ஆசிய கோப்பை தொடர் ரத்துசெய்யப்பட்டதாக எவ்வித தகவலும் வரவில்லை. ஆசிய கோப்பை தொடர் பற்றிய ஆலோசனைக்கு எங்களைத் தொடர்புகொள்வார்கள் என எதிர்பார்த்துள்ளோம். சில விஷயங்கள் பற்றி விசாரணை நடத்திவருகிறோம். பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை'' என்றார்.

சவுரவ் கங்குலி

மேலும் கங்குலியின் கருத்திற்கு, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் நஸ்முல் ஹசன் இதுவரை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆசிய கோப்பை தொடரை ஐக்கி அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், கரோனா பரவல் காரணமாக இலங்கையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'தற்போது கொல்கத்தா மட்டுமல்ல; இந்தியாவே தாதாவின் கோட்டைதான்'

ABOUT THE AUTHOR

...view details