தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'இல்ல இல்ல மொத்தக் கோட்டையும் அழிங்க'..! அதிரடி மாற்றத்தில் பாகிஸ்தான் வாரியம்!

உலககோப்பை தொடர் தோல்வி எதிரொலியால் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளாவர், உள்ளிட்ட நான்கு பேரின் ஒப்பந்தத்தை நீடிக்க பிசிபி மறுத்துள்ளது.

மொத்தக் கோட்டையும் அழிங்க... அதிரடி மாற்றத்தல் பாகிஸ்தான் வாரியம்!

By

Published : Aug 8, 2019, 2:47 AM IST

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 1992 தொடரை போலவே, அந்த அணியின் முடிவுகள் இந்தத் தொடரிலும் இருந்தது (தேஜாவூ) முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

ஆனால், பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடித்து அரையிறுதிக்குள் நுழையாமல் தங்களை நம்பி இருந்த ரசிகர்களை ஏமாற்றியது. இதையடுத்து, அந்த அணியின் தேர்வுக்குழுத் தலைவராக இருந்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம்- உல்- ஹக் பதவியில் இருந்து விலகினார்.

இதைத்தொடர்ந்து, 2023 இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பைக்கு பாகிஸ்தான் அணியை தான் தயார் செய்துக்காட்டுகிறேன் என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்திருந்தார்.

கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது - பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்

இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமதை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்தார். அவரது பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று முடிவடையும் நிலையில், அவரை தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீக்கியுள்ளது. இந்த முடிவை பிசிபி இன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுத்துள்ளது.

பாக் வீரர்களுடன் மிக்கி ஆர்தர்

இதுமட்டுமின்றி, பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளாவர், பவுலிங் பயிற்சியாளர் அசார் முகமது, டிரெய்னர் கிராண்ட் லுடேன் ஆகியோரது ஒப்பந்தத்தை புதிபிக்கவும் பிசிபி மறுத்துவிட்டது. இதனால், தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட நான்கு பதவிகளுக்கான விண்ணப்பங்களை கோரவும் பிசிபி திட்டமிட்டுள்ளது.

இதைப்பார்த்தால் வெண்ணிலா கபடிக்குழுப் படத்தில் சுரியின் காமெடியை போல் 'இல்ல இல்ல மொத்த கோட்டையும் அழிங்க... நான் முதலில் இருந்து சாப்பிடுறேன்' என்ற வசனத்தை போல பிசிபி தற்போது அணியை மேம்படுத்தும் பணியில் களமிறங்கியுள்ளது.

சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பையுடன் மிக்கி ஆர்தர்

இந்தியாவில் நடைபெற வேண்டிய மாற்றங்களெல்லாம், பாகிஸ்தானில் நடைபெறுகிறதே என்று நெட்டிசன்கள் தங்களது குமுறல்களை தெரிவிக்கின்றனர். மிக்கி ஆர்தரின் பயிற்சின்கீழ் பாகிஸ்தான் அணி 2017இல் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details