ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இந்தாண்டில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய நபர் என்ற சாதனையைப் படைத்தார்.
கம்மின்ஸ், இந்த ஆண்டில் மட்டும் 59 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி இச்சாதனையைப் படைத்துள்ளார். மேலும் இந்தப் பட்டியலில் சக அணி வீரரான நாதன் லயன் 40 விக்கெட்டுகளுடன் இரண்டமிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
கம்மின்ஸ், 2019ஆம் ஆண்டு டெஸ்ட்டில் 59, ஒருநாள் போட்டிகளில் 31, டி20 போட்டிகளில் ஒன்பது விக்கெட்டுகள் என மொத்தமாக 99 விக்கெட்டுகளை வீழ்தி சர்வதேச அரங்கில் இந்தாண்டு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்தப் பட்டியலில் கம்மின்ஸிற்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் முகமது சமி, 77 விக்கெட்டுகளுடன் இரண்டாமிடம் பிடித்துள்ளார். சமி, இந்தாண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட் கம்மின்ஸ், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரின் வீரர்கள் ஏலத்தில், ரூ.15.5 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். இதன் மூலம் ஐபில் தொடரில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை அடைந்தார் கம்மின்ஸ்.
இதையும் படிங்க: பவுலிங்கில் 4 விக்கெட் பேட்டிங்கில் 89 ரன்கள்: தெறிக்கவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால்