இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று தொடங்கிய ஐந்தாம் நாள் ஆட்டத்தில் 309 ரன்கள் என்று வெற்றி இலக்கை நோக்கி களமிறக்கிய கேப்டன் ரஹானே, இன்றைய ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் - புஜாரா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்த ரிஷப் பந்த் அரைசதமடித்தார்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாராவும் சர்வதேச டெஸ்டில் 26ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய ரிஷப் பந்த் 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நாதன் லயன் வீசிய பந்தை பவுண்டரி அடிக்க முற்பட்டு கம்மின்ஸிடம் கோட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் சதமடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.