தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

திரும்பி வந்துட்டேன்னு சொல்லு... மாஸாக ரீ எண்ட்ரீ கொடுத்த நட்சத்திரங்கள்! - ஹர்திக் பாண்டியா

காயம் காரணமாக சமீப காலமாக இந்திய அணியில் இடம்பிடிக்காமலிருந்த நட்சத்திர வீரர்கள் ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவான் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.

Pandya makes strong return, Dhawan, Bhuvi star in DY Patil T20 Cup
Pandya makes strong return, Dhawan, Bhuvi star in DY Patil T20 Cup

By

Published : Feb 29, 2020, 3:44 AM IST

மும்பையில் ஆண்டுதோறும் டி.ஒய்.படில் விளையாட்டு அகாதமி, மும்பை கிரிக்கெட் வாரியம் இணைந்து நடத்தும் டி.ஒய்.படில் டி20 தொடர் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது.

மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, ரவுண்ட்ராபின் முறையில் நடைபெறவுள்ளது.

இத்தொடரில் சமீப காலமாக காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்த நட்சத்திர வீரகள் ஹர்திக் பாண்டியா, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார் ஆகியோர் ரிலையன்ஸ் 1 என்ற அணியில் இடம்பிடித்து விளையாடி வருகின்றனர்.

இத்தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரிலையன்ஸ் 1 அணி - பேங்க் ஆஃப் பரோடா அணியை எதிர்த்து விளையாடியது.

இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 25 பந்துகளில் 35 ரன்களையும், தவான் 14 ரன்களையும் எடுத்தனர். பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார் நான்கு ஓவர்களில் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதன்மூலம் ரிலையன்ஸ் 1 அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் பேங்க் ஆஃப் பரோடா அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.

மேலும் நட்சத்திர வீரர்கள் காயத்திலிருந்து மீண்டு தற்போது தங்களது ஃபார்மிற்கு திரும்பியுள்ளதால் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: காயத்திலிருந்து மீண்டு இன்றைய போட்டியில் களமிறங்கும் தவான், புவனேஷ்வர், பாண்டியா!

ABOUT THE AUTHOR

...view details