பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே ஜனவரி 26ஆம் தேதி நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிக்க அணியை வீழ்த்தி, 14 ஆண்டுகளுக்கு பின்னர் தனது சொந்த மண்ணில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இப்போட்டிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், “தற்போது நாங்கள் பெற்றுள்ள வெற்றியானது எங்கள் அணிக்கு மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் இத்தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி படுதோல்வியைச் சந்தித்திருந்தது. மேலும், தென் ஆப்பிரிக்க போன்ற பலம் வாய்ந்த அணியுடன் சொந்த மண்ணில் வெற்றி பெறுவது எங்களுக்கு பெரும் உத்வேகமாக அமைந்துள்ளது.