பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி மூன்று ஒருநாள், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
பவுண்டரி விளாசும் வில்லியம்சன் அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் பிராண்டன் டெய்லர் 36 ரன்களையும், வில்லியம்ஸ் 75 ரன்களையும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதன் மூலம் 45.1 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 206 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் இஃப்திகார் அஹ்மது ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இஃப்திகார் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இமான் உல் ஹக் - அபித் அலி இணை அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. இதில் இமாம் உல் ஹக் 49 ரன்கள் ஆட்டமிழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் பாபர் அசாம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார். இதன் மூலம் 35.2 ஓவர்களிலேயே பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டி அசத்தியது.
அதிரடியில் மிரட்டிய பாபர் அசாம் இதன் மூலம் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது. இப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவிய இஃப்திகார் அஹ்மது ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிங்க:மீண்டும் அசத்திய கெய்க்வாட்; பாஞ்சாப்பின் பிளே ஆஃப் கனவை தகர்த்தது சிஎஸ்கே!