தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 தொடரை கைப்பற்றிய இலங்கை; சொந்த மண்ணில் வீழ்ந்த பாக்.! - ராஜபக்‌ஷே

லாகூர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதோடு, டி20 தொடரையும் இலங்கை அணி வென்று அசத்தியுள்ளது.

பாக்

By

Published : Oct 7, 2019, 11:48 PM IST

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடர் முடிவடைந்து டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில், முதல் போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது.

ராஜபக்‌ஷே

இதில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இலங்கை அணி வீரர்களில் ராஜபக்‌ஷே 48 பந்துகளில் 77 ரன்களும், ஜெயசூர்யா 34 ரன்களும், கேப்டன் ஷனகா 15 பந்துகளில் 27 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.

உடானா

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களில் பாபர் அசாம் 3 ரன்களிலும், ஃபக்கர் சமான் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அதையடுத்து களமிறங்கிய ஷேஷாத் 13 ரன்களிலும், கேப்டன் ஷர்ப்ராஸ் அஹ்மத் 26 ரன்களிலும் வெளியேற, உமர் அக்மல் தன் பங்கிற்கு ரன் சேர்க்காமல் பெவிலியன் திரும்பினார்.

பாகிஸ்தான் அணி 52 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறிய நிலையில், ஆசிஃப் அலி, இமாத் வாசிம் ஆகியோர் சிறிது நேரம் போராடினர். பின்னர் அலி 29 ரன்களிலும், இமாத் வாசிம் 47 ரன்களிலும் ஆட்டமிழக்க இலங்கை அணியின் வெற்றி உறுதியானது.

நுவான் ப்ரதீப்

இறுதியாக பாகிஸ்தான் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்ததால், இலங்கை அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இலங்கை அணி சார்பாக நுவான் ப்ரதீப் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக 77 ரன்கள் எடுத்த ராஜபக்‌ஷே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதால், இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது.

இதையும் படிக்கலாமே: ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங்கை விவரித்து வீடியோ வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்

ABOUT THE AUTHOR

...view details