வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட வரும் மார்ச் 29ஆம் தேதி கராச்சிக்கு செல்லவிருந்தது. அதன்பின் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இவ்விரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி ஏப்ரல் ஐந்தாம் தேதி நடைபெறவிருந்தது.
தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் வங்கதேச அணியின் பாகிஸ்தான் சுற்றுப்பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.