பாகிஸ்தான் - வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ராவில்பிண்டியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 233 ரன்களும், பாகிஸ்தான் அணி 445 ரன்களும் எடுத்தன. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 143, ஷான் மசூத் 100 ரன்கள் அடித்தனர்.
இதைத்தொடர்ந்து, 212 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வங்கதேச அணி நேற்றைய மூன்றாம் ஆட்டநேர முடிவில் 45 ஓவர்களில் ஆறு விக்கெட்டை இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியின் விழும்பில் இருந்தது. இந்நிலையில், நான்காம் ஆட்டநாள் இன்று தொடங்கிய சில மணி நேரங்களிலேயே வங்கதேச அணி 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வங்கதேச அணியின் கேப்டன் மொமினுல் ஹக் 41, நஜ்முல் ஹொசைன் 38, தமிம் இக்பால் 34 ரன்கள் அடித்தனர். ஏனைய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.